Friday, 26 September 2014

Tagged Under: ,

ஐ அசுரன் மேக் அப் ரகசியம்.

By: ram On: 21:09
  • Share The Gag
  • ஐ அசுரன் மேக்கப் ரகசியம்!

    கிராபிக்ஸ் இல்லாமல், மிரட்டும் கேரக்டர்களை உருவாக்குவதில் நியூசிலாந்தின் ‘வீட்டா வொர்க்ஷாப்’ ரொம்ப ஸ்பெஷல். ஷங்கரின் ‘ஐ’யில் விக்ரம் கெட் அப்களை உருவாக்கியவர், இந்த ‘வீட்டா’வின் சீனியர் மேக்கப் டெக்னீஷியனான ஷான் ஃபுட்.

    ‘‘ ‘ஐ’ மேக்கப்… என்ன ஸ்பெஷல்?’’

    ‘‘இதில் ஷங்கர் காட்ட நினைச்சது நிஜத்துல இல்லாத ஒரு விஷயம். அசிங்கமான தோற்றம் கொண்ட ஒரு கேரக்டர் வேணும்… ஆனா, அது ஆடியன்ஸ் முகம் சுளிக்காதபடி இருக்கணும்னு பக்காவா பிளான் பண்ணி வச்சிருந்தார். அதனால எனக்கு ஈஸியா போச்சு. ‘ஐ’ போஸ்டர்ல பார்த்த அந்த அசுரன் கெட்டப், படத்துல மெயினா வருது.

    அதை மட்டுமே எழுபது முறை பண்ணியிருக்கேன். ஸ்பெஷல் மேக்கப் தேவைப்படுற படங்கள் இந்தியாவில் அதிகம் வராததால, எங்க மேக்கப்புக்கு தேவையான மெட்டீரியல்ஸ் கூட இங்கே கிடைக்கல. இம்போர்ட்தான் பண்ணினோம். இந்த மெட்டீரியல்ஸை கொஞ்சம் அசட்டையா கை யாண்டாலும் அலர்ஜியாகலாம். அதோட, இந்தியாவின் வெயில் சூழலுக்கு இது சரியா வருமான்னே கொஞ்சம் பயந்தேன். ஆனா, சரியா வந்துச்சு. நல்லா வந்திருக்கு!’’

    ‘‘ஆசியாவிலேயே முதல் முறையா ஒரு தமிழ்ப் படத்தில் உங்களை வொர்க் பண்ண வச்சது எது?’’‘‘த ஒன் அண்ட் ஒன்லி ஷங்கர். அவர் ஸ்டோரி சொன்ன விதம். எங்க நிறுவனம் ஆரம்பிச்சு இப்ப இருபதாவது வருஷத்தைக் கொண்டாடுறோம். ஹாலிவுட்ல, ‘தி ஹாபிட்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’, ‘நார்னியா’ன்னு ஃபேன்டஸி படங்கள் நிறைய ‘வீட்டா வொர்க்ஷாப்’ல பண்ணியிருக்கோம். நிறைய இயக்குநர்களோட வேலை செஞ்சிருக்கேன்.

    ஷங்கர் மாதிரி தெளிவா, குழப்பமில்லாம கதை சொல்ற வேற யாரையும் இதுவரை பார்த்ததில்லை. ஓரளவு கதை சொல்லிட்டு, ஸ்பாட்ல போய் பாத்துக்கலாம்னு அவர் நினைக்கலை. என்கிட்ட என்ன சொன்னாரோ, அதை அப்படியே நான் கொண்டுவரும் வரை வேலை வாங்கினார். சின்னச் சின்ன விஷயத்தில் கூட பர்ஃபெக்ஷன் எதிர்பார்த்தார். சொல்லப் போனா, ஹாலிவுட்டுக்கே ஷங்கர் வரணும். நிச்சயம் அவர் அங்கேயும் சாதனை பண்ணுவார்!’’

    ‘‘விக்ரம்…’’‘‘பழகின கொஞ்ச நாள்லயே அவர் ஒரு ஹார்ட் வொர்க்கர்னு புரிஞ்சுக்கிட்டேன். வேகமான இங்கிலீஷ்ல அவர் எனக்கு நல்ல கம்பெனி. ஷங்கர் மாதிரியே இவரும் நல்ல மனசுக்காரர். வீட்டிலிருந்து எனக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து கவனிச்சிக்கிட்டார். விக்ரமோட கெட்டப் மேக்கப்புக்கு ஆரம்பத்துல மூணு மணி நேரம் செலவழிச்சோம்.

    அப்புறம் ரெண்டு மணி நேரம்… பின்னாடி ஒரு மணி நேரத்துலயே மேக்கப் போடப் பழகிட்டேன். ஒரு தடவை மேக்கப் போட்டா 16ல இருந்து 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். இந்த மேக்கப்பை கலைக்க, நாற்பது நிமிஷம் ஆகும். விக்ரம் ரொம்பப் பொறுமையா இருந்தார். ‘ஐ’ ஷூட்டிங் சமயத்துலதான் என் பிறந்தநாள் வந்தது. ஷங்கரும், விக்ரமும் சர்ப்ரைஸா கேக் வெட்டி, என்னை சந்தோஷத்துல உருக வச்சிட்டாங்க!’’

    ‘‘எமி ஜாக்ஸனுக்கு கெட்டப் எதுவும் இருக்கா?’’‘‘டைரக்டர்கிட்ட கேளுங்க… (சிரிக்கிறார்) எமி ரொம்ப ஃபன்னி. ஸ்பாட்டுல துறுதுறு. கொடைக்கானல்ல ஷூட்டிங் நடந்தப்போ, குழந்தை மாதிரி அங்கிருந்த குரங்குகளுக்கெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கிட்டிருந்தார்.

    லவ்லி பர்சன்!’’ ‘‘அடுத்து…’’‘‘இங்க வந்த ‘எந்திர’னையும் ‘நான் ஈ’யையும் பார்த்து அசந்துட்டேன். இந்தியாவில் எங்க நிறுவனம் இன்னும் நிறைய பண்ணணும்னு நினைக்குது. ‘ஐ’ வொர்க் பண்ணினப்பவே ராஜமௌலியோட ‘பாகுபாலி’யிலும் கொஞ்சம் கான்ட்ரிபியூட் பண்ணினேன். டைரக்டர்ஸ் நிறைய பேரை சந்திச்சிட்டிருக்கேன். விக்ரமோட அடுத்த படத்திலும் வேலை செய்யறேன்.

    எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. தனி ஆள்தான். கேரளா, பெங்களூரு, மைசூருன்னு தென்னிந்தியாவுல சில இடங்கள் போயிருக்கேன். இந்தியப் பெண்கள் ரொம்ப அழகா இருக்காங்க. ஷங்கர் எனக்கு பொண்ணு பார்த்து கொடுத்தார்னா, கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கேன்!’’ எனச் சொல்லிச் சிரிக்கிறார் வெட்கத்தோடு!

    0 comments:

    Post a Comment