
'ஐ' படத்தின் பிரம்மாண்டத்தையும், அப்படத்தில் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிப்பையும் சமீபத்தில் நடத்திய ஆடியோ விழாவில் திரையிட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மூலம் கோடிட்டுக் காட்டிவிட்டார் இயக்குநர் ஷங்கர். ஐ படத்தைப் போலவே, தற்போது பாஹுபலி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைக்கின்றன.
பாஹுபலி படத்திற்காக கலை இயக்குநர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். சாபு சிரில் குழுவினர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 50 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி உதவி செய்தது ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.
சிலையை செய்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைவிட மிகப்பெரிய சவால் ஒன்றும் இருக்கிறது என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. என்ன சவால்? அந்த சிலையை நேராக நிமிர்த்தி, குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துவது அந்த சவால்.
0 comments:
Post a Comment