தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என நிறைய பிரச்சனைகளில் சிக்கி கொண்டிருக்கிறது விஜய் நடித்த கத்தி படம்.
சமீபத்தில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா பிரச்சனைகளுக்கான விளக்கத்தை கூட அளித்திருந்தார்.
ஆனால் அந்த விளக்கத்தையும் ஏற்க தமிழ் அமைப்புக்கள் மறுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த பிரச்சனைகள் போதாது என்று ஏ. ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் கோபி நாயனார், தன்னிடம் அனுமதி பெறாமல் தனது கதையை கத்தி படத்திற்கு பயன்படுத்தி இருப்பதாகவும், அதனால் கத்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை நகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த கோர்ட், கோபி நாயனாரின் குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறி ஏ.ஆர்.முருகதாசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment