வெங்கட் பிரபு படம் என்றாலே கலகலப்புக்கும், த்ரில்லிங்க்கும் பஞ்சம் இருக்காது. அவருடைய எல்லா படத்திலும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து அசத்துவார். ஆனால் போன பிரியாணி படத்தில் கொஞ்ச தவறவிட்ட சில ட்விஸ்ட்டான விஷயங்களை சூர்யா படத்தின் மூலம் சரி செய்து களம் இறங்க உள்ளாராம்.
சமீபத்தில் இப்படத்துக்கு மாஸ் என்ற டைட்டிலை வைத்து பலரையும் மாஸாக திரும்பி பார்க்க வைத்தார் வெங்கட் பிரபு.
தற்போது இப்படம் கதை கரு கசிந்து உள்ளது, அதாவது இப்படம் காமெடி பின்னணி கொண்ட ஒரு சூப்பர் நேச்சுரல் படம். நமக்கு கிடைத்த தகவல் படி கதையில் மூன்று முக்கியமான கதபாத்திரங்களில் கருணாஸ், ஸ்ரீநாத் மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் டேனியல் ஆகிய முவரும் ஆவிகளாக நடிக்க சூர்யாவின் கண்ணுக்கு மட்டுமே இவர்கள் தெரிவார்களாம்.
இவர்களுடன் சூர்யாவும் ஒரு சந்தர்ப்பத்தில் இணைய அதற்கு பிறகு நடக்கும் மாஸ் விஷயங்கள் தான் வெங்கட் பிரபுவின் மாஸ்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்க, முதன்முறையாக ஆர். டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கே .இ ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க உள்ளது.
0 comments:
Post a Comment