Saturday, 9 August 2014

Tagged Under: ,

பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்..!

By: ram On: 20:26
  • Share The Gag

  • இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்

    ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்

    ” பள்ளிக்கூடம் போனயா ?”
    ” போனேன் “
    ” சாப்பிட்டாயா ?”
    “ம்… சாப்பிட்டேன் “
    “என்ன சாப்பிட்ட கண்ணா ?”
    சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

    தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி,
    ” டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு “
    சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை . கேட்டால் அடிவிழும்.மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை . ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் .
    தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

    எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி . ” அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே . ” என்றார் .

    எம்.ஜி.ஆர் புன்னகையுடன் , மணியிடம் ” டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் , நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? “

    மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு “அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே “என்று கேட்டுக்கொண்டார் .
    “சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது ” – தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்

    மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் .
    மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , “அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு ” என்று உத்தரவிடுகிறார்.

    அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர் . அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

        இது என்ன மாதிரியான சாமார்த்தியம் , மனிதநேயம் என்றேகணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் ..

         இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது ? .இவருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்

    0 comments:

    Post a Comment