கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா.
இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தாலும், படத்தில் அசால்ட் ரவுடியாக நடித்திருக்கும் சிம்ஹாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜிகர்தண்டா வெற்றியை பகிர்ந்து கொள்ள நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சித்தார்த்திடம் ஒரு ஹீரோவாக இருந்து சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு சித்தார்த், ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படத்தில் அமீர் கான் சாருடை கதாபாத்திரத்தை விட என் கதாபாத்திரம் தான் வலுவாக இருந்தது. ஆனாலும் அமீர்கான் அப்படத்தில் நடித்தார்.
அவ்ளோ பெரிய ஸ்டார் கதை மட்டும் பார்த்து நடிக்கும் போது, நான் நடித்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment