கிராமப்புறங்களில் வயல் வெளிகள் பக்கம் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகை இது. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு ம ருந்துக் கடைகளில் முத்துக்காசு என்றும் குறிப்பிடுவர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி போன்ற நறுமணப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது.
கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. கடு மையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறையில் இம்மருந்தினை தயாரிக்க வேண்டும்.
இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.
குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ் சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத் துக்கொள்ள வேண்டும்.
காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவி டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண் டும். இதே முறையில் சாப்பிட சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.
0 comments:
Post a Comment