கலியன் தானம் மாறி தலைகீழாக பூமி வெடித்து தோன்றியவன்(குரோணியின் 6 துண்டம்)முன் யுகங்களில் தன்னை அழித்தார் என்பதற்காகவே விஷ்ணுவையும் அவர் கிளைகளான நம்மையும் அழிக்க வேண்டும் என்றே அவன் விஷ்ணு போலவே உயரம் கொண்டு பிறந்தவன் அவனை ஈசனிடம் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
உடனே தேவர்கள் கலியனிடம்”கலியனே இவர்தான் ஈசர் இவ்வுலகையும் படைத்தவர் எங்கும் நிறைந்தவர் இவரிடம் உனக்கு வேண்டிய வரங்களை வாங்கிக்கொள்”என்று தேவர்கள் சொல்ல இதைக்கேட்ட கலியன் ஏளனமாக சிரித்து விட்டு “இவனா கடவுள் இவனா கேட்டதை தருவான் மேனி எங்கும் குப்பையை பூசி இருக்கிறான் பண்டாரம் போல் இருக்கும் இவனா கடவுள்”என்றான்.
இதை கேட்ட தேவர்கள் கலியனிடம் “அப்படி பேசாதே இவர்தான் அனைத்தையும் அடக்கி ஆள்பவர்,எட்டாதப்பொருள்,தோணாதப்பொருள்” என்று விளக்க இதைக்கேட்ட கலியன் “அப்படியானால் எனக்கு துணையாக ஒரு பெண்ணை படைத்து கொடுக்க சொல்லுங்கள் பார்போம் அதுமட்டுமல்ல அவள் அழகில் பேரளகியாகவும் அவள் கண் விழி அனைவரையும் மயக்கும் தன்தையாகவும் கொங்கைகள் சரியாமலும்,அவள் மேல் எப்பொழதும் கமகம என வாசனையடனும் உடனே படைத்து தாருங்கள்“ என்று கேட்க என்று கலியன் சொல்ல அவன் விளா எலும்பில் இருந்தே ஒரு பெண்ணை உடனே படைத்துக்கொடுக்கிறார்.
பெண்ணை கண்டவன் தன்னை மறந்தான் வாரி எடுக்கலாமா என நினைக்குறான் முத்தமிடலாமா என நெருங்க உறவு கொள்ளவும் தயாராகிறான் தேவர்கள் அவனை தடுக்கிறார்கள்.உடனே கலியன் ஈசனிடம்”ஈசனே இந்ந பெண்மேல் உள்ள ஆசை என் கடைசி மூச்சி இருக்கும் வரை சிறிதும் குறையக்கூடாது” என கேட்டான்(அதனால்தான் இன்றும் கலி எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பெண்ணாசை தலைக்கேறி நிற்கிறது’.
அதுப்போல் முதலில் கலியன் இறைவன் இவனா என்று சந்தேகப்படுவதனாலேயே இன்றும் கலி எண்ணம் புகுந்த மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் கடவுள் இருக்கிறானா?இருக்கிறானா?என்று சோதிக்கிறார்கள்.அய்யா உண்டு
0 comments:
Post a Comment