தமிழ் சினிமாவின் என்றும் ஹீரோயின்களுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. ஆந்திரா, கேரளா, மும்பை என அனைத்து மாநிலங்களின் கதாநாயகிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் கோலிவுட்.
தற்போது அந்த வரிசையில் இணைந்திருப்பவர் காவ்யா ஷெட்டி. இவர் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில் ஏ.எல்.விஜய், விக்ரம் பிரபுவை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.
இதுகுறித்து இவர் ‘ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment