கணவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் மனைவிக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பெரும்பாலான மனைவிகளுக்கு, தங்களது கணவரிடம் பிடிக்காத விஷயம் என்று ஒன்று இருக்குமானால் அது எதுவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா?
தாய்க்குப் பின் தாரம் என்று ஒரு பழமொழி உள்ளது. இதனை சரியாக உணர்ந்தால் இந்த தவறு சரிசெய்யப்படும். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய தாயை மதிப்பதோ, அவரது சொல்படி நடப்பதோ நல்ல விஷயம்தான். ஆனால், திருமணமாகி தன்னை நம்பி வந்த பெண்ணுக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டியதும் அவசியமாகிறது. பொதுவாக எதைச் செய்தாலும் அம்மாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவரது சொல்படிதான் நடப்பேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சுயபுத்தியில்லை என்று மனைவி நினைக்க வேண்டி வரும்.
மேலும், உங்கள் இருவருக்குள் இருக்கும் சில சின்ன சின்ன விஷயங்களும், தாய்க்கு தெரிவிக்கப்பட்டால், ஒரு சுதந்திர மனப்பான்மையை உங்கள் மனைவி இழக்க வேண்டி வரும்.
எனவே, எது சரி, எது தவறு என்று முடிவெடுத்து அதனை உங்கள் தாயின் கவனத்திற்கும் கொண்டு வந்து நீங்கள் செய்வதில் தவறில்லை.
சரி இப்படி ஒரு ஆண், தனது தாயின் பேச்சைக் கேட்டு நடப்பதை விரும்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமானதும் எல்லாமே மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு, உங்களது அன்பு, அக்கறை போன்றவை தான், ஒரு ஆணுக்கு தாய் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிது தளர்வை ஏற்படுத்துமேத் தவிர, அதிகாரம் அல்ல. எந்தப் பெண்ணும் தனது கணவரை தாயை விட்டுப் பிரித்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீங்கள் இழப்பது உங்கள் கணவரின் அன்பைத்தான். எனவே எதையும் உங்களது அன்பாலும், அக்கறையாலும் சரி செய்ய முடியும் என்பதை உணருங்கள்.

0 comments:
Post a Comment