Thursday, 2 October 2014

Tagged Under:

மூழ்கிய உலகம் கண்டுபிடிப்பு

By: ram On: 17:25
  • Share The Gag
  • காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ...ஆ ...ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர்.

    சுமார் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இப்பாரிய நிலப்பரப்பில் நதிகளும் - முன்பு மலைகளாக இருந்தவற்றின் மிச்சங்களாய் - நில உச்சங்களும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றனவாம். அவை ஒரு கடற்கரை நாட்டின் வரைபடம் போன்று காட்சியளிப்பதாகவும், இந்தப் படிவுகள் கடற்படுக்கையின் கீ...ழே இரண்டு கி.மீ தொலைவில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் நில ஆய்வியல் மூத்த அறிஞர் நிக்கி வைய்ட் தெரிவித்துள்ளார்.

    மேம்படுத்தப்பட்ட எதிரொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வின் மூலம் சுமார் 10,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இப்பாரிய நிலப்பரப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


    0 comments:

    Post a Comment