நமது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி நமக்கு அதிகாலையிலேயே விரைவாக எழுந்து கதிரவனுக்கு நீரை காணிக்கையாக வழங்குவதை நமக்கு சிறுவயது முதலே கற்று கொடுத்துள்ளனர். நாம் வாழ்கின்ற இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்துள்ள நம்முடைய இந்த பழக்கம் உண்மையிலேயே நமக்கு உதவி புரிகிறதா? அல்லது இது வெறும் கட்டுகதையா?
ஒரு டம்ளரையோ அல்லது கைகளை பயன்படுத்தியோ சூரியனுக்கு தண்ணீரை காணிக்கையாக வழங்குவது நமக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகளும் அறிவியல் காரணங்களும் தெரிவிக்கின்றன. நாம் நமது இரு கைகளையும் உயர்த்தி சூரிய கடவுளை நோக்கி ஊற்றும் போது, மிக மெல்லிய நீரோட்டம் விழுகிறது. அந்த நேரத்தில் நம்மால் சூரியனை நோக்கி பார்க்க முடிவதில்லை காரணம் மிக வலுவான சூரிய கதிர்கள் வெளிப்படுவதனால்.
நமது முன்னோர்கள் ஒரு பரந்த விளிம்புடைய பாத்திரத்தில் நீரை எடுத்து கொண்டு அதிகாலையில் சூரிய கடவுளுக்கு காணிக்கை செலுத்தினர். இரு கைகளையும் மேலே உயர்த்தி கண்களின் முன்னால் ஒரு பரந்த பாத்திரத்திலிருந்து நீர், காணிக்கையாக செலுத்தபட்ட போது நமது முன்னோர்கள் அந்த நீரோட்டத்தின் வழியாக சூரியக்கடவுளை கண்டனர். சூரிய உதயத்தின் போது சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த கதிர்கள் கண்களுக்கு மட்டும் சிறந்தவை அல்ல; மேலும் முழு உடலுக்கும் ஆன்மாவிற்கும் வலுவூட்டும் வல்லமை படைத்தது.
மனித உடல் ஆற்றலினால் நிறைந்தது என்ற போதிலும் அதிகாலையில் வெளிப்படும் சூரியகதிர்கள் நன்மைகள் நிறைந்தவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித உடல் ஐந்து விஷயங்களால் ஆனது அவை காற்று, தண்ணீர், பூமி, தீ மற்றும் வானம். மேலும் உடலின் அனைத்து வியாதிகளுக்கான சிகிச்சைகளும் இந்த ஐந்து விதமான விஷயங்களிலேயே காணப்படுகின்றன. அவற்றுள் உதயமாகும் சூரிய கதிர்களும் அடங்கும். சூரிய கதிர்களை பயன்படுத்தி எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும். உதாரணம் இதயம், கண்கள் சம்பந்தபட்ட நோய்கள், மஞ்சள் காமாலை, தொழுநோய், பலவீனமான மன வியாதிகள் ஆகியவை ஆகும்.
ஒருவரை உறக்கத்திலிருந்து எழுப்புவது சூரியனே என்கிறது ரிக் வேதம். சூரியனின் காரணமாகவே அனைவரும் சுறுசுறுப்புடன் செயலாற்ற முடிகிறது. அனைத்து உயிரினங்களின் உருவாக்கமும், சூரியனையே சார்ந்துள்ளது. சூரியன், ஒருவரது உடல், மனம் மற்றும் ஆன்மீக பலவீனங்களை நீக்கி அவரை நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ செய்கிறது. சூரியனின் ஏழு நிறங்களும் நன்மை பயக்குபவை. மேலும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையும் கூட. ஒருவர் அதிகாலையிலேயே குளியலை முடித்து பின்னர் கடவுளுக்கு பூஜை செய்து சூரிய கதிர்களை தமது வெற்றுடம்பில், அனுமதித்தால் அவரது உடலிலிருந்து அனைத்து வியாதிகளும் விடை பெறும். மேலும் அவரது அறிவாற்றல் அதிகரிக்கும்.
மறுபுறம் சூரியன் தாகத்தில் இல்லை என்றும், இது போன்று காணிக்கை செலுத்துவதே சூரியனை அடையும் வழி என்றும், பல மாற்று கருத்துகள் நிலவுகின்றன. இதனை நிரூபிக்க ஒரு துறவி கங்கை நதியின் கரையில் 2-3 அடி அளவிற்கு நீர் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினார். மற்ற துறவிகள் அவரிடம் புனிதமான கங்கையின் நீரை ஏன் இப்படி வீணாக்குகிறீர் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்த துறவி, தான் தனது கிராமத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் விட்டதாக தெரிவித்தார்.
மற்ற துறவிகள் கோபம் கொண்டு இது போல செய்வதால் இந்த நீர் அவரது வயல்களை அடைய போவது இல்லை என்று கூறினர். அந்த துறவி சிரித்து கொண்டே அவ்வாறெனில் உங்களது காணிக்கைகள் மட்டும் எவ்வாறு சூரியனை அடையும் என்று கேட்டார். "ஆரக்யா" மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இன்னும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இரு வேறுபட்ட தத்துவவாதிகள் இடையே இது குறித்தான குழப்பங்களும், மோதல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
0 comments:
Post a Comment