Thursday, 2 October 2014

Tagged Under:

உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என கண்டறிய?

By: ram On: 19:58
  • Share The Gag
  •  உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என கண்டறிய?
    உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, ஏதாவது வெளியில் கம்பியூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் (யூசர்நேம்)  மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.


    கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல் பாருங்கள் உங்கள் ஈ-மெயில் தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.

    உடனே Signout all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Signout  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.

    0 comments:

    Post a Comment