
சந்திரமுகி, காஞ்சனா ஸ்டையில் கதை தான் என்றாலும் அதில் சுந்தர்.சி என்ன புதுமை செய்திருக்கிறார் என்பதே மேட்டர். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரசிகர்களை மிரட்டி சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது கதை.
சுந்தர்.சி படம் என்றாலே கமர்ஷியல் பேக்கேஜ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், அந்த வகையில் இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவிற்கு ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, வினய், கோவை சரளா, மனோ பாலா இவர்களுக்கு எல்லாம் மேலாக நம் சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலமே சந்தானம் தான், விட்ட இடத்தை பிடித்து விட்டார், அதற்கும் ஒரு பஞ்சாக படத்தில் இவன்லாம் "எனக்கு காம்ப்பட்டிசனே கிடையாது, ஏதோ கேப்ல வந்துட்டான்” போன்ற சூரிக்கு விடும் மறைமுக தாக்குதல் வசனங்கள் கைத்தட்டல் பறக்கிறது.
குறிப்பாக மனோ பாலாவிடம் இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் கைத்தட்டல் மற்றும் விசில் சத்தம் அடங்கவே சில மணி நேரம் ஆகிறது. இதுவரை வெறும் அழகிகளாக மட்டும் பார்த்து வந்த ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்றோரை மிரட்டும் கெட்டப்பில் காட்டி நம்மையும் கதிகலங்க வைத்துள்ளார் இயக்குனர்.
படத்தின் ஒரே பலவீனம் பாடல்கள் மட்டும் தான், அதையும் பின்னணி இசையில் மூலம் ஓவர் டேக் செய்து விடுகிறார் கார்த்திக்ராஜா.
மொத்தத்தில் கவலைகள் மறந்து சந்தோஷமாக இருக்க நம்பி அரண்மனைக்குள் போகலாம்.
0 comments:
Post a Comment