சர்க்கரை நோய்
1. காய்ச்சி ஆறின (அல்லது வெது வெதுப்பான) தண்ணி ஒரு சிட்டிகை நைஸாக பொடிச்ச பட்டைத்தூள் (சமையல்ல வாசனைக்குப் பயன்படுத்தறபட்டைதான்) போட்டுக் கலந்து வச்சு , காலையில் வெறும் வயித்தில் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கும்.
2. வெந்தயத்தை ராத்திரியேஊறவச்சு, காலையில் அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து வெறும் வயித்தில் குடிச்சாலும் நல்லது.
3. பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணி இவற்றில் ஏதாவது ஒரு துண்டு எடுத்து பச்சையாகவோ வேகவச்சோ அரைச்சு அந்தத் தண்ணியைக் காலையில் குடிக்கலாம். ஆனா, இது குடிச்சா, 2 மணி நேரத்துக்கு அப்புறம்தான் காபி,டீ குடிக்கணும். அது முடியாதவங்க, வாழைத் தண்டு அல்லது பூசணியை பச்சையா தயிர் பச்சடி பண்ணி சாப்பிடலாம்
0 comments:
Post a Comment