
சமந்தா நாயகியாக நடித்த இப்படத்தின் இசைவெளியீடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரங்கேறியது.
ஆர்யா, சிபிராஜ், தரணி, பேரரசு, விக்ரமன், ஏ.எல் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் உட்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய இளையதளபதி விஜய், நான் ஒருபோதும் தமிழனுக்கு எதிரான ஒரு காரியத்தை செய்யமாட்டேன்.
நான் தியாகி என்று சொல்லமாட்டேன். ஆனால் துரோகி இல்லை என அதிரடியாக பேசியதோடு இவ்விழாவின் நாயகன் அனிருத்தையும் பாராட்டினார்.
லைகா புரொடெக்சன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment