Tuesday, 2 September 2014

Tagged Under: ,

இந்த வருடத்தின் அதிர்ஷ்ட நடிகர் விஜய் சேதுபதிதான்...!

By: ram On: 18:28
  • Share The Gag
  • ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து தற்போது கோலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள மெல்லிசை, கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கும் வன்மம், சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் இடம் பொருள் ஏவல், ஆர்யா, ஷாமுடன் இணைந்து நடிக்கும் புறம்போக்கு மற்றும் விஜய் சேதுபதி 45 வயது தோற்றத்தில் நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் என படங்களின் பட்டியல் நீள்கிறது.

    இதுதவிர தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் நானும் ரௌடிதான் என்ற படமும், இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் வசந்த குமரன் என்ற படத்திலும் நடிக்க தொடங்கவுள்ளார்.

    இந்த வருடத்தில் இத்தனை படங்களில் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான்.

    0 comments:

    Post a Comment