Tuesday, 2 September 2014

Tagged Under:

பிரசவத்துக்கு அப்புறம் வேலைக்கு போவது நல்லதா? கெட்டதா?

By: ram On: 07:37
  • Share The Gag
  • வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்து கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங்களுக்கு பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். அவ்வாறு வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா? என்பதை பார்ப்போமா!!!

    * பொதுவாக பிரசவம் முடிந்த பிறகு, தாய் கண்டிப்பாக குழந்தையுடன் இருக்க வேண்டும். அதிலும் பிரசவம் முடிந்த பிறகு அனைத்து தாய்மார்களும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவற்றை உடனடியாக நிறுத்த முடியாது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது அலுவலகத்தில் தரும் பிரசவ விடுமுறையை, பிரசவத்திற்கு பின் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்வதோடு, அவர்களது உடல் நிலையும் நன்கு இருக்கும்.

    * நிறைய மகப்பேறு மருத்துவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின், ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது நல்லது என்று கூறுகின்றனர். அதிலும் சிசேரியன் பிரசவம் என்றால், தையல் காய்ந்து, குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். அதிலும் அவர்கள் நடக்கும் போது, வேலை செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் தையல் பிரிந்து, கடுமையான வலியை ஏற்படுத்திவிடும். ஆகவே ஓய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.

    * பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வேலைக்குச் சென்றால், அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது. அதிலும், பிரசவத்திற்குப் பின் உடல் நலம் சரியாகாத போது வேலை செய்தால், பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வேலைக்கு நிறைய நாட்கள் விடுமுறை போட் முடியாது என்று நினைப்பவர்கள், பிரசவத்திற்குப் பின் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, அதிக நேரம் வேலை செய்வதை தவிர்த்து ஓரளவு செய்து வந்தால், எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம்.

    * வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது மிகவும் சிறந்தது. இதனால் வேலையை பார்த்தது போலும் இருக்கும், குழந்தையை பார்த்துக் கொள்வது போலும் இருக்கும். ஆனால் நிறைய பெண்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆள் வைப்பார்கள். அது நல்லதல்ல. தாய் பார்த்துக் கொள்வது போல் எதுவும் வராது. அதுவும் அவ்வப்போது சரியான நேரத்திற்கு குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், மார்பகப்புற்று நோய் வரும் நிலை ஏற்படும். ஆகவே எதுவோ, குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது.

    * எங்கு வேலை செய்தாலும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பின் நிறைய ஓய்வு உடலுக்கு வேண்டும். சாதாரணமாக இருக்கும் போது அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, அப்போது செய்ய முடிந்த வேலை கூட, சில சமயங்களில் செய்ய முடியாமல் போகும். ஏனென்றால் அவ்வளவு உடல் சோர்வாக இருக்கும்.
    ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, உங்கள் பிரசவத்திற்குப் பிறகு என்ன செய்வதென்று முடிவெடுங்கள்.

    0 comments:

    Post a Comment