Tuesday, 2 September 2014

Tagged Under:

பொது இடத்தில தும்மவோ, இருமவோ சிரமமா இருக்கா?

By: ram On: 08:19
  • Share The Gag
  • நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்றவைகளோடு அடிக்கடி சிறுநீர் தொற்றுகோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.

    மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

    மெனோபாஸ் பெண் உறுப்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு அதன் சுவர்களில் பாக்டீரியாக்கள் குடியேறுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதுவே சிறுநீர் தொற்றின் ஆரம்பமாகிறது. பின்னர் படிப்படியாக அரிப்பு, வலி, சிறுநீர் பிரியும் போது எரிச்சல், சிறுநீர் கலங்கலாக இருத்தல் போன்றவை காணப்படும் என்கின்றனர் பிரபல மகப்பேறு மருத்துத்துறை மருத்துவர்கள்.

    சத்தான ஜூஸ்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டவர்கள் தினசரி ஒரு பழரசம் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இது 35 சதவிகிதம் வரை சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். பெர்ரீ பழ ஜீஸ் அருந்தினால் சிறுநீர் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் நோய் தொற்று பாக்டீரியாக்களை கொல்கிறது.

    பால் பொருட்கள்

    மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றினை தடுக்க பால் பொருட்கள் நன்மை தருகின்றன. யோகர்டு, சீஸ் போன்றவை வாரத்திற்கு மூன்று முறையாவது உண்ணவேண்டும். இது 80 சதவிகிதம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும். இதில் உள்ள நன்மை தரும் லாக்டோசில்லி பாக்டீரியாக்கள் தீமை தரும் பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் பழங்களை சாப்பிட வேண்டும். வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். நல்ல உறக்கமும், ஓய்வும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    தண்ணீர் அதிகம் அருந்துங்கள்

    அதிக அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும் என்கின்றர் மருத்துவர்கள். தினசரி 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். மிதமான சுடுநீரை பாட்டிலில் ஊற்றி அடி வயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். இது நோய் தொற்றினால் ஏற்படும் வலியை தவிர்க்கும்.

    காபி குடிக்காதீங்க

    மெனோபாஸ் பருவத்தில் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ரஸ் பழ ஜூஸ்களை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல் காஃபின் சேர்க்கப்பட்ட உணவுகள், சில சாக்லேட்கள், காபி, ஆல்கஹால் போன்றவைகள் மெனோபாஸ் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காரமான உணவுகளையும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

    0 comments:

    Post a Comment