இசைக்கு மறுபெயர் என்று இருந்தால் கண்டிப்பாக அது இளையராஜாவாக தான் இருக்கும். கடந்த 30 வருடங்களாக இசைத்துறையில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இவர்.
ஆனால் சமீபத்தில் மேகா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர் கூறிய தகவல் ஒன்று அனைவரையும் ஆச்சரியபட வைத்தது. இதில் 'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்க்கும் போது எனக்குப் பிடிக்கவில்லை. அதை பாரதிராஜாவிடம் நேரடியா சொல்லிட்டேன்.
படத்துல கிளைமாக்ஸ் காட்சி, அதுக்கு இசையமைச்சிட்டு பாராதிராஜாவைக் கூப்பிட்டுக் காட்டினேன். அவரு அப்படியே கையை பிடிச்சிக்கிட்டு கண்ணீரோட “உனக்குப் பிடிக்காமலயே இவ்வளவு அருமையா இசையமைச்சிருக்கியேன்னு” உணர்ச்சிவசப்பட்டு பேசினார்’ என்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
0 comments:
Post a Comment