அமலாபால் 45 வயது தோற்றத்தில் நடிக்கிறார். இப்படியொரு தகவலை தான் இயக்கப் போகும் ‘கிட்ணா’ படத்திற்காக கசிய விட்டிருந்தார் சமுத்திரக்கனி. அந்த இயற்கைக்கே இது பொறுக்கவில்லை. அமலாவை 45 வயதில் பார்ப்பதா? அப்படியெல்லாம் ஒரு துரதிருஷ்டம் தமிழனுக்கு தேவையா? என்றெல்லாம் யூத்துகள் பதறுவதற்குள், இல்லற பந்தத்தில் நுழைந்து, சினிமாவையும் துறந்துவிட்டார் அமலாபால். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கண்கட்டு வித்தையை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொள்வதற்குள் அடுத்த வித்தை ஆரம்பம்.
இதே கிட்ணா படத்தில் மீண்டும் அமலா நடிப்பார். கல்யாணம் ஆனால் என்ன? அவரது கணவர் சம்மதித்தால் நடந்துவிட்டு போகட்டுமே என்றெல்லாம் கோடம்பாக்கம் மீண்டும் அமலாவுக்கு வலை வீச, அந்த வலையை கிழித்துவிட்டு, வம்படியாக உள்ளே நுழைந்திருக்கிறார் தன்ஷிகா. ‘அமலாபால் கேரக்டர்ல நான் நடிக்கிறேன்’ என்று சமுத்திரக்கனியை அவர் அணுகியதாகவும், பொன்னை வச்சாலும் சரி, பூவை வச்சாலும் சரி. காலா காலத்துல படத்தை முடிப்போம் என்று தன்ஷிகாவை ஓ.கே என்று டிக் அடித்துவிட்டாராம் சமுத்திரக்கனி.
அந்த 45 வயசு கெட்டப் தன்ஷிகாவுக்கும் உண்டு. அப்படின்னா…? மேக்கப் செலவுல கொஞ்சம் மிச்சமாகுமோ?
0 comments:
Post a Comment