Wednesday, 13 August 2014

Tagged Under: ,

நாங்கல்லாம் அப்பவே அப்படி..! இப்ப சொல்லவாவேனும் என்கிறார் சூர்யா..!

By: ram On: 17:42
  • Share The Gag

  • விஜய்யும், சூர்யாவும் ‘நேருக்கு நேர்’ மற்றும் ‘பிரண்ட்ஸ்’ படங்களில் இணைந்து நடித்தார்கள். தற்போது இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். பெரிய ரசிகர்கள் வட்டாரத்தையும் வைத்துள்ளனர்.

    இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தமிழில் அப்படி இல்லை. பல நடிகர்கள் பேசிக் கொள்வதுகூட இல்லை. ஒருவர் பங்கேற்கும் விழாவில் மற்றவர்கள் கலந்து கொள்வதையும் தவிர்க்கிறார்கள்.

    இந்த நிலையில் மலையாள பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த சூர்யாவிடம், விஜய்யுடனான உங்கள் நட்பு எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா அளித்த பதிலில் ‘‘விஜய் என்னுடைய நல்ல நண்பர். கல்லூரி காலத்தில் இருந்தே நட்பு தொடர்கிறது. ஒருவருக்கொருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். என் படங்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகும் போதெல்லாம் அதை பார்த்து பாராட்டி மொபைல் போனில் தகவல் அனுப்புவார். சினிமா பற்றி அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்’’ என்றார்.

    0 comments:

    Post a Comment