சில நாட்களாகவே தமிழ் சினிமா இந்த காப்பி என்ற வலைக்குள் சிக்கி தான் தவிக்கிறது. என்ன தான் நல்ல படம் எடுத்தாலும் இது அந்த கொரியன் படத்தின் காப்பி, அது இந்த ஈரான் படத்தின் காப்பி என்று எளிதாக சொல்லிவிடுகிறார்கள்.
தற்போது வேலையில்லா பட்டதாரி விரைவில் வரயிருக்கும் பொறியாளன் படத்தின் காப்பி என்று தகவல் கசிய இதற்கு வேல்ராஜே விளக்கம் அளித்துள்ளார்.(ஏனெனில் பொறியாளன் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது).
இதில் பொறியாளன் படம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது, இது நாம் எடுத்துக்கொண்டு இருக்கும் விஐபி படம் போலவே இருக்கிறது என்று தான் தோன்றியது, பின் படத்தின் முழுக்கதையை கேட்ட பிறகு தான் தெரிந்தது, இது வேற கதை என்று.
படத்தில் ஹீரோ ஒரு சிவில் இன்ஜினியர், அது மட்டும் தான் ஒற்றுமை மற்றப்படி இது முற்றிலும் மாறுப்பட்ட கதை என்று விளக்கம் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment