தேவையான பொருட்கள் :
துளசி இலை - ஒரு கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• துளசியை தனியாக அரைத்து கொள்ளவும்.
• மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• புளியை கரைத்துக் அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.. நன்றாக கொதி வந்தததும் அரைத்து வைத்துள்ள தனியா பருப்பு கலவையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
• கடைசியாக அரைத்து வைத்துள்ள துளசியை போட்டு நுரை வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.
• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
• இந்த துளசி ரசம் ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
0 comments:
Post a Comment