Friday, 8 August 2014

Tagged Under: ,

தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி...!

By: ram On: 08:04
  • Share The Gag

  • இன்றைய தலைமுறையினரை பெரிதும் அவதிப்பட வைப்பது தொப்பை. இவர்களுக்கு இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை.

    இவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

    இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நிற்கவும். கைகளை தலையின் பின்புறம் கொண்டு சென்று கைகளை இணைத்து கொள்ளவும். பின்னர் வலது காலை முட்டி வரை மடக்கி மேலே தூக்கவும். இப்போது இடது கை முட்டியால் வலது கால் முட்டியை தொட(படத்தில் உள்ளபடி) வேண்டும்.

    அடுத்து இடது கால் முட்டியை மேலே தூக்கி வலது கை முட்டியால் தொட வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது முதுகை வளைக்க கூடாது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கலாம்.

    0 comments:

    Post a Comment