Sunday, 19 October 2014

Tagged Under:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

By: ram On: 09:03
  • Share The Gag
  • இன்று தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டு மெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உண வுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

    அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.

    குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

    முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும் ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

    மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

    உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

    காலையில் எழுந்ததும் தேன்- வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும்.

    மூலிகை டீ- டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

    முட்டை- தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

    பால்- பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது

    தர்பூசணி- காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும் எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

    ஓட்ஸ்- தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    காபி- காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும் மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

    சிட்ரஸ் பழங்கள்- சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும் மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

    கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

    வாழைப்பழம்- காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும் அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

    ஆளி விதை- பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம் ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

    தயிர்- நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள் அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும்.

    கோதுமை முளை- முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும் அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும் ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

    பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும் மேலும் இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

    பெர்ரிப் பழங்கள்- பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும் மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

    வேர்க்கடலை வெண்ணெய்- வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளுவது மட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும் எனவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    தண்ணீர்- காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும் அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும் எனவே இவறில் ஒன்றை சாப்பிட்டால், மிகவும் நல்லது.

    0 comments:

    Post a Comment