Thursday, 16 October 2014

Tagged Under: ,

ப்ரித்விராஜுக்கு பதிலடி கொடுத்த சிம்பு!

By: ram On: 07:57
  • Share The Gag
  • சில நாட்களுக்கு முன் ப்ரித்விராஜ் நடிகர் சிம்புவுடன் சண்டை குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். இதில் அந்த நிகழ்ச்சியில் நானும், சிம்புவும் பேசி வைத்து தான் இப்படி செய்தோம் என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த சிம்பு ‘அவரு பேசி வைச்சு பண்ணியிருக்கலாம். அவர்கிட்ட பேசி, இந்த மாதிரி சொல்லு அப்படினு சொன்னாங்களா என்று எனக்கு தெரியாது. அது அவரோட பெர்சனல். என்கிட்ட தொலைக்காட்சி தரப்பில் இருந்து அந்த மாதிரி எதுவுமே சொல்லவில்லை.

    அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், 'இந்த மாதிரி நடந்ததே, அதை போடட்டுமா?' அப்படினு கேட்டு தான் ஒளிபரப்பினாங்க. என்னோட கோபம் நிஜம். ப்ரித்வி ஏதாவது காமெடியாக சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment