Thursday, 16 October 2014

Tagged Under: ,

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்?

By: ram On: 01:43
  • Share The Gag
  • இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் என்றால் இளையராஜா தான். இவர் இசைக்கு மயங்காதவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு இசை என்பதே தெரியாமல் இருந்திருக்கும் என்று தான் அர்த்தம்

    தற்போது அவரின் கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இளையராஜா, தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.

    போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறாராம். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்க உள்ளார்

    .

    0 comments:

    Post a Comment