
இப்படத்தின் இயக்குனர் ரவி.கே .சந்திரன் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதாலும், ரவி கே சந்திரன் இயக்கிய முதல் படம் என்பதாலும், யான் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யான் வெளியான அன்று அரதப்பழசான கதை, அவுட்டேட்டட் திரைக்கதை காரணமாக யான் படத்தை ரசிகர்கள் அறவே விரும்பவில்லை.
ரசிகர்களின் விமர்சனத்தைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர், யான் படத்தில் ரசிகர்களை அதிகமாக நெளிய வைக்கும் சில காட்சிகளை வெட்டிவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார். குறிப்பாக, துளசியின் விசிட்டிங் கார்டை ஜீவா கீழே தவறவிட்டு, அதை அவர் எடுக்க முயலும் காட்சியை அடியோடு வெட்டிவிட வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.
அதற்கு யான் படத்தின் இயக்குநரான ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அந்தக்காட்சியை நீக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். அந்தக் காட்சியில் காமெடி சூப்பராக வந்திருக்கிறது என்பது இயக்குநர் தரப்பு நியாயம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையினால் தியேட்டரில் ஓட வேண்டிய யான் திரைப்படம் தியேட்டரைவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் இடையில், இன்னும் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில், ''இவங்க பிரச்சனையினால் என் படத்தை காலி பண்ணிட்டாங்களே..'' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜீவா
0 comments:
Post a Comment