Tuesday, 7 October 2014

Tagged Under: ,

இயக்குனர் சுசீந்தரனின் அடுத்த படத்தில் இரண்டு இளம் ஹீரோக்கள் !

By: ram On: 22:04
  • Share The Gag
  • ஜீவா படத்தின் வெற்றி களைப்பில் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீயையும், சமீபத்தில் வெளிவந்த பொறியாளன் படத்தில் நடித்த ஹரிஷையும் வைத்து தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளார் சுசீந்தரன். ஹீரோயினாக சம்ஸ்கிருதி செனாய் நடிக்கிறார்.

    இப்படத்தின் கதை இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஈகோதான். தென் சென்னையில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஒரு மாதம், ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் சுசீந்திரன். ஸ்ரீயும், ஹரீசும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

    0 comments:

    Post a Comment