Wednesday, 10 September 2014

Tagged Under: ,

இந்த பொண்ணு நல்லா தம்மடிக்கும் போலிருக்கு! டைரக்டர் பேச்சால் சலசலப்பு

By: ram On: 08:18
  • Share The Gag
  • அமானுஷ்யம்…. ஆலமரம்… பேய்.. பிசாசு… பில்லி… சூனியம் என்று தமிழ்சினிமாவின் தற்போதைய ட்ரென்ட்டில் மேலும் ஒரு படம்…. ‘ஆலமரம்’ . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த ஆலமரத்தின் விழுதுகள் அப்படியே நெருக்கி பிடித்து ஒருவரை இழுக்கிற காட்சியை திரையிட்டார்கள். ‘இனிமே மழைக்கு கூட ஒரு பய ஆலமரம் பக்கம் ஒதுங்க மாட்டான்’ என்றொரு நிருபர் ஓப்பன் கமென்ட் அடிக்கிற அளவுக்கு திகில் கிளப்பினார்கள். ஆலமரம் இயக்குனர் எஸ்.என்.துரைசிங் ராஜ்கபூர், பாக்யராஜ், ஜி.எம்.குமார் போன்ற இயக்குர்களிடம் பணியாற்றியவராம்.

    ‘நான் பாக்யராஜ் சார் ஸ்டைலைதான் என்னோட திரைக்கதையில் பாலோ பண்றேன்’ என்றார் துரைசிங். (படம் பார்க்கும் போதுதான் தெரியும் எப்படின்னு?) இந்த கதையை எழுதிட்டு ஹீரோவை தேடிகிட்டு இருந்தேன். அப்பதான் ஹேமந்த் வந்தான். அதுக்கு முன்னாடியே இருபது பசங்களுக்கு மேலே பார்த்துட்டேன். இவனை பார்த்ததும் கதைக்கேற்ற முகம் இதுதான்னு முடிவுக்கு வந்தேன். ஹீரோயின் அவந்திகா மோகன் நம்ம படத்துல நடிக்க வந்தப்போ அறிமுக நாயகி. அதற்கப்புறம் மலையாளத்தில இரண்டு மூணு படம் பண்ணிட்டாங்க. இருந்தாலும் கூப்பிட்டப்பல்லாம் வந்து நடிச்சு கொடுத்துட்டு போனாங்க.

    படத்தில் பேய் வந்த பொண்ணா நடிக்கறதுக்குதான் ஒரு நடிகையை தேடிகிட்டு இருந்தேன். அப்பதான் சீரியல்ல நடிச்சுட்டு இருந்த சிந்துவை பார்த்தேன். நேரா வீட்டுக்கு போயிட்டேன். நீ இந்த கதையில் பேயா நடிக்கணும்னு சொன்னவுடன் சரின்னு ஒத்துகிச்சு. அதற்கப்புறம் தம்மடிக்கிற மாதிரி சீன் இருக்குன்னு சொன்னதும் கூட யோசிக்கவேயில்ல. அது போதுமா… இல்ல குடிக்கிற மாதிரி சீன் இருக்கான்னு வேற கேட்டுச்சு என்று அதிர வைத்தார் துரைசிங். இந்த சிந்து வத்திக்குச்சி படத்தில் அஞ்சலிக்கு தோழியாக நடித்திருந்தவர்தான்.

    கடைசியாக துரைசிங்கின் குருநாதர் டைரக்டர் ராஜ்கபூர் பேசினார். சிந்துவை ரொம்பவே புகழ்ந்தவர் எனக்கென்னவோ அந்த பொண்ணு சும்மாவே தம்மடிக்கிற கேரக்டர்தான்னு தோணுது என்று கூற, பளீரென சிரித்தார் சிந்து. அப்ப கூட எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லீங்ணா… என்று சொல்லலையே?

    ஒரு வேளை நெசமா இருக்குமோ?

    0 comments:

    Post a Comment