Wednesday, 10 September 2014

Tagged Under:

சோப்பு, டூத் பேஸ்டால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு! – ஆய்வு தகவல்

By: ram On: 20:23
  • Share The Gag
  • இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி பொருட்களால் உயிரணு எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி இந்திய ஆணின் உயிரணு எண்ணிக்கை ஒரு மில்லியில் 60 மில்லியன் என்றளவில் இருந்தது தற்போது 20 மில்லியனாக குறைந்திருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்த நிலையில் .மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சோப்புகள், பற்பசைகள் (‘டூத் பேஸ்ட்’) மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாலும் ஆண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெரும்பாலான நகரங்களில் குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும் என்றும் இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்து சொல்லியிருந்தார்கள்.

    அதன் அடுத்தக் கட்டமாக நாம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு ரசாயன பொருட்களால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன நச்சு பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைத்து குழந்தை பேறு ஏற்படாமல் தடுக்கிறது. இது பலவிதமான ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment