Wednesday, 10 September 2014

Tagged Under:

காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!

By: ram On: 01:31
  • Share The Gag
  • காதுக்கு இனிய இசை, மனதுக்கு பிடித்த புத்தகம், ருசியான சாப்பாடு, இதுபோலத்தான் காதலும். தாம்பத்ய வாழ்க்கையில் காதல், அன்போடு சின்ன சின்ன சில்மிஷங்கள், ரொமான்ஸ்கள் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இல்லற வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். தம்பதியரிடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்க நிபுணர்கள் கூறுவதை கேளுங்களேன்.

    மனித வாழ்க்கையில் காதலும் ரொமான்ஸும் மட்டும் இல்லை என்றால் பாதிப்பேர் பைத்தியமாகத்தான் அலைந்திருப்பார்கள். அந்த அளவிற்கு காதலும் ரொமான்ஸ் உணர்வுகளும் மனித வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பவை.

    காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் ‘பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுனமொழியில்கூட காதல் செய்துவிடலாம். ‘ப்ளடானிக் லவ்’ (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்ஸ் அப்படியல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

    ‘மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே உறவும், பிணைப்பும் அதிகரிக்க வேண்டும் எனில் காதல், அன்போடு, கொஞ்சம் ரொமான்ஸ் உணர்வுகளும் இருக்கவேண்டும்.

    கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கு வெளியே சென்று வரும் கணவன் ஒரு முழம் பூ வாங்கி வந்தால் கூட அது ரொமான்ஸ்தான்.

    முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மனிதர்களின் ரொமான்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கூட மூன்றுவகையானவர்கள் இருக்கிறார்கள். அதில் முதல் வகை, ‘நான் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

    இரண்டாவது வகை ‘நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

    மூன்றாவது வகை, ‘நான் சரி யாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை’ என்று நினைப்பவர்கள்.

    இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள் முதல் வகைதான். ‘நானும் சரி, நீயும் சரி. பேசித்தீர்ப்போம் வா’ என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

    இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

    எனவே தம்பதியரிடையே காதலும், ரொமான்ஸ் அதிகரிக்கவேண்டும் எனில் சந்தோசமாக, சங்கீதமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கின்றனர் நீங்க எப்படி? உங்க ரொமான்ஸ் வாழ்க்கை எப்படி?

    0 comments:

    Post a Comment