
ஆனால் இவர்களில் சற்று வேறு மாதிரியான பெண்மணியாக இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரது முதல் படமான ‘ஆரோகணம்’ என்ற தலைப்பே நாலு மாசம் உட்கார வச்சு ட்யூஷன் எடுத்தாலும் புரியாத ரகம். எப்படியோ? அந்த படத்தையும் வெற்றிகரமாக எடுத்து வெற்றிகரமாக கலெக்ஷன் காட்டினார். இதற்கு காரணம் அவரது துணிச்சலும், நம்பிக்கையும், குறும்படங்களை இயக்கிய முன் அனுபவமும்தான்!
தற்போது ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி. படத்தின் தயாரிப்பாளர் அனுப், மெடிமிக்ஸ் சோப் கம்பெனி அதிபர். போதாதா? பணத்தை கரைத்தாலும் பரவாயில்லை. தொழிலில் சுத்தம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். அன் லிமிடெட் பட்ஜெட் என்ற அபரிமித சுதந்திரத்தோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அவர். படத்தில் தம்பி ராமய்யாவுக்கும் முக்கிய ரோல்.
ஆறு நாள் கொடுங்க சார் போதும். நீங்க ஸ்பாட்டுக்கு வந்துருங்க. உங்களுக்கு சவுரியப்படும்போது ஷாட்டுக்கு வந்தா போதும் என்றெல்லாம் ஏராளமான சலுகை காட்டிதான் அழைத்துப் போனாராம் லட்சுமி. போனால்… ஷுட்டிங் ஸ்பாட்? கொழுத்த வெயில் ரோடு. அதுவும் கொந்தளிக்கும் மே மாசம். லாரியில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து பயணிப்பதை போல காட்சிகள் எடுக்கப்பப்பட, அடுப்புல போட்ட முட்டை மாதிரி ஆகிவிட்டார் தம்பிராம‘ஐயோ’
பொதுவா இந்த மாதிரி கான்சப்ட் படங்களை ஆண்கள்தான் எடுப்பாங்க. ஆனால் ஆண்களுக்கு நிகரா இந்த படத்தை எடுத்திருக்கிறாங்க லட்சுமி மேடம் என்று பாராட்டு தெரிவித்தார் தம்பிராமய்யா. படத்தின் கதை? ஏதோவொரு முக்கியமான தேசிய குற்றத்தை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
இந்த படத்தின் ரிலீசிற்கப்புறம், தமிழ்சினிமாவின் முதல் பெண் ஆக்ஷன் டைரக்டர் என்று அவர் கொண்டாடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!
சிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்