தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.
மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம்.
`நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன்.
நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம்.
மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.
அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி. * கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
0 comments:
Post a Comment