மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லால்.
இவரது மகன் பிரணவ் எப்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்குவார் என்ற கேள்வி, மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதிலிருந்தே மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மோகன்லால் நடித்த ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் பிரணவ்.
இப்படத்தை தொடர்ந்து பெரிய ஒரு இயக்குனர் மூலம் பிரணவ் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
ஆனால், பிரணவ் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மலையாள ‘திரிஷ்யம்’ படத்தின் ரீ-மேக் ஆன இப்படத்தை திரிஷ்யத்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே தமிழிலும் இயக்க, அவருக்கு உதவி இயக்குனராகி இருக்கிறார் பிரணவ்!
‘பாபநாசம்’ படத்தை மோகன்லாலின் மைத்துனரும், பிரணவின் தாய் மாமாவுமான சுரேஷ் பாலாஜி மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
0 comments:
Post a Comment