ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
உண்ணுவதில் எளிமை: வாழ்வதற்காகவே உண்ண வேண்டும் என்ற தொடர் மொழியை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். எளிமையான உணவுகள், குறைந்த எண்ணெயில் சமைத்த நற்பதமான உணவுகள் போன்றவைகளை உண்ண மக்களை அறிவுறுத்த வேண்டும். எந்த ஒரு டையட்டிலும் உண்ணக்கூடிய உணவின் அளவை தான் முதலில் மாற்ற வேண்டி வரும். டையட்டை மேற்கொள்பவர்கள் மனரீதியான கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவை கண்டிப்பாக அவர்களால் கைவிட முடியும். அதனால் கஞ்சி, வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப்கள் மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உண்ண வேண்டும்.
நொறுக்குத் தீனிகள்: வறுத்த, எண்ணெய் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேரளாவின் பாரம்பரிய அவித்த வாழைப்பழத்தை உங்கள் நொறுக்கு தீனிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளங்களை பொறித்து எடுக்காமல் லேசாக வறுத்தாலே போதுமானது.
அதிக நார்ச்சத்துள்ள தானியங்கள்: வரகு சாதம் அல்லது அவித்த காய்கறிகளுடனான அதிக நார்ச்சத்துள்ள பார்லியை உண்ணலாம். இவைகளை அதிகமாக உட்கொண்டாலும் கூட தெவிட்டாது. இவைகளை உங்களின் மதிய உணவில் அல்லது இரவு உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஓட்ஸ் மற்றும் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக உண்ணாதீர்கள்.
இனிப்புகள் மற்றும் டெசர்ட்கள்: டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர வேறு இனிப்புகளுக்கு இடம் கிடையாது. ஆனாலும் சர்க்கரையை இழந்த உணர்வை நீங்கள் பெற மாட்டீர்கள். எனவே கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், அவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நிலையாக வைத்து இனிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.
புரதம் நிறைந்த உணவுகள்: சோயா, பலவித பருப்புகள், கொண்டைக்கடலை, கொள்ளு மற்றும் பச்சை பயிறு போன்ற உணவுகளில் இருந்து புரதச்சத்தை பெற்றிடுங்கள். அசைவ உணவு வகைகளுக்கு ஆயுர்வேதம் தடை போடுவதில்லை. ஆனால் ஹார்மோனால் உருவாக்கப்படும் மாமிச இனங்கள் என்றால் கண்டிப்பாக கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம் � ஆனால் குழம்பில் வைத்த மீனே தவிர பொரித்த மீன் அல்ல.
பானங்கள்: அடர்த்தியான தயிருக்கு பதிலாக மோரை பருகுங்கள். டீ மற்றும் காபி கூட பருகலாம். தினமும் 1500 மி.லி. அளவிலாவது இளஞ்சூடான தண்ணீரை பருகினால், உங்களை நீர்ச்சத்துடன் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, பசி வருவதையும் தாமதப்படுத்தும். வெதுவெதுப்பான நீர் நீண்ட நேரம் வயிற்றில் இருப்பதால் பசி உண்டாவதை தாமதப்படுத்தும்.
உங்கள் விருப்ப உணவுகளை தவிர்த்தல்:நீங்கள் சாதம் சாப்பிடுபவராக இருந்தால், மதிய உணவின் போது கோதுமை தோசை அல்லது சப்பாத்திக்கு மாறுங்கள். அதனால் உண்ணும் அளவு குறையும். இதனை மாற்றி பின்பற்றினாலும் கூட அதுவும் உதவி புரியும்.
கலோரிகளை எண்ணுதல்: கலோரிகளை எண்ணுவது மட்டும் முக்கியம் அல்ல. உண்ணும் உணவிலும் வாழ்க்கையிலும் நெறிமுறையை கடைப்பிடிப்பது அவசியம். உண்ணுவதில் மாறிய உணவு பழக்கங்களும், அணுகுமுறையும், உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் பெரிதும் உதவும்.
முக்கியமானவை: சூரிய உதயத்திற்கு முன் காலையில் வேகமாக எழுந்திருப்பது, பகலில் தூங்காமல் இருப்பது அல்லது இரவு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்க்காமல் இருப்பது போன்ற இதர வாழ்க்கை முறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கொள்கைகளை ஒரு மாத காலம் கடைப்பிடித்தால், உடல் நல எடை குறைப்பிற்கு அது ஒரு பாதை வகிக்கும். மேலும் எளிய உணவுகள் மற்றும் உடல ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவைகளே ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியங்கள்.
0 comments:
Post a Comment