Wednesday, 3 September 2014

Tagged Under: ,

எனக்கு சிலை செதுக்கியது யார்...? விஜய்...!

By: ram On: 07:18
  • Share The Gag
  • நடிகைக்கு கோவில் கட்டுவது, சிலை அமைப்பு என்பதெல்லாம் தமிழக ரசிகர்களுக்கு சர்வசாதரணமான ஒன்று. அந்த வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் இரண்டு பேர், சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

    மதுரை பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், சிற்ப தொழிலாளி. இவரது மகன்கள் நாகராஜன் (வயது27), சுப்புரு (23). 6–ம் வகுப்பு வரை படித்த சுப்புரு அதன்பிறகு தனது தந்தைக்கு உதவியாக சிற்ப தொழிலில் ஈடுபட்டார்.

    சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சுப்புரு விஜய் படம் வெளியாகும் தினத்தன்றே அந்த படத்தை பார்த்து விடுவது வழக்கம். விஜய் மீது கொண்ட தீவிர பற்று காரணமாக அவருக்கு சிலை அமைக்க சுப்புரு முடிவு செய்தார்.

    இதை தனது சகோதரர் நாகராஜனிடம் தெரிவிக்க 2 பேரும் சேர்ந்து வேலாயுதம் படத்தில் வரும் விஜய் போன்ற தோற்றமுள்ள ஒரு சிலையை வடிவமைத்தனர். வடிவமைக்கப்பட்ட அந்த சிலையை பேஸ்புக்கில் போட்டனர். அதனை பார்த்து நடிகர் விஜய் மறுநாள் சுப்புருவை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்து பேசி சிலை நன்றாக உள்ளது என்று பாராட்டினார்.

    சமீகத்தில் மதுரை வந்த நடிகர் விஜயின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சுப்புரு வீட்டுக்கு சென்று விஜய் சிலையை வடிவமைத்த சுப்புரு, நாகராஜனை பாராட்டினார்.

    சிமிண்டால் செய்யப்பட்ட அந்த சிலையில் வர்ணம் பூசப்பட்டு தத்ரூபமாக நடிகர் விஜய் போல காட்சியளிக்கிறது. இந்த சிலையை சென்னைக்கு எடுத்து சென்று நடிகர் விஜயை நேரில் சந்தித்து வழங்கப்போவதாக சுப்புரு தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment