ஏ.ஆர். ரகுமான் கோலிவுட், பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிற்கு இசையமைத்து வருவது நமக்கு தெரியும். அவரது இசையில் மயங்கியுள்ளாராம் ஹாலிவுட் மற்றும் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட்.
இவர் 4 முறை கிராமி விருது பெற்றதுடன் இளசுகளை கவரும் குரல் வளத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
இவர் ரஹ்மான் இசையை பற்றி கூறுகையில், இந்திய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மயங்கி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதில் கூறும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான், கண்டிப்பாக நீங்கள் இந்தியா வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment