உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய வைரமுத்துவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
ஏற்கனவே லேசான முதுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் விழா அலைச்சல் காரணமாக வலி அதிகரித்தது, இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தவுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த், வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நிலை பற்றி நலம் விசாரித்தார். அவருக்கு மலர் செண்டு தந்த ரஜினி, விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தினார். ரஜினியும், வைரமுத்துவும் நெருங்கிய நண்பர்கள், ரஜினியின் படங்கள் பெரும்பாலனவற்றுக்கு வைரமுத்து தான் படால்கள் எழுதியுள்ளார். மேலும் ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது வைரமுத்து அவரை சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கதது.
0 comments:
Post a Comment