Wednesday, 6 August 2014

Tagged Under: ,

உங்கள் ஜீன்ஸ்கள் பழுதடையாமல் நீண்ட காலம் பயன்பட வேண்டுமா?

By: ram On: 21:53
  • Share The Gag

  • தற்போது சுடிதார், புடவை போன்றவற்றை அணிவோரை விட, ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கை தான் அதிகம். ஏனெனில் சுடிதார், புடவை போன்றவற்றை ஒருமுறை அணிந்தால் மீண்டும் அவற்றை அணிய வேண்டுமானால் துவைத்த பின்னர் தான் அணிய முடியும். ஆனால் ஜீன்ஸ் என்றால் ஒருமுறை அணிந்தால், பின் துவைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம். அதுமட்டுமின்றி, ஒருவரிடம் 2 ஜீன்ஸ் இருந்தால் போது, அதற்கு நிறைய டி-சர்ட்டுகளை வாங்கி பலமுறை அழகாக காணலாம்.

    அத்தகைய ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதற்கு போதிய பராமரிப்பு கொடுப்பதுடன், அவ்வப்போது துவைத்தும் வர வேண்டும். இங்கு நாம் பயன்படுத்தும் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதன்படி பின்பற்றினால், நிச்சயம் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.

    சரியாக மடித்து வைக்கவும்

    ஜீன்ஸ் மிகவும் கடினமாக இருப்பதால், அதனை சரியாக மடித்து வைக்க வேண்டும். மேலும் அவ்வப்போது அதை மடிக்கும் ஸ்டைலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஒரே மாதிரி மடிக்கும் போது அவ்விடத்தில் கோடுகள் போன்று விழுந்து, பின் நிறம் மங்கி வெளுத்துவிடும். Show Thumbnail

    பிரஷ்னர்கள் பயன்படுத்த வேண்டாம்

    ஜீன்ஸ் நறுமணத்துடன் இருக்க வேண்டுமென்று சிலர் பிரஷ்னர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தினால், ஜீன்ஸில் உள்ள இயற்கை நறுமணத்துடன், பிரஷ்னரின் நறுமணம் சேர்த்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.

    வாரத்திற்கு ஒரு முறை துவைக்கவும்

     ஜீன்ஸை வாரத்திற்கு ஒருமுறையாவது துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.

    ப்ளீச்சிங் பவுடர் சேர்க்க வேண்டாம்

    நீண்ட நாட்கள் ஜீன்ஸ் போட்டு பின் துவைப்பதால், சில அதில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று ப்ளீச்சிங் பவுடர் சேர்ப்பார்கள். ஆனால் அப்படி ப்ளீச்சிங் பவுடர் சேர்த்தால், அது ஜீன்ஸின் நிறத்தை போக்கி, வெளுத்துவிடும்.

    வினிகரில் ஊற வைக்கவும்

    ஜீன்ஸை துவைக்கும் போது, அதன் நிறம் மங்காமல் இருப்பதற்கு, வினிகர் கலந்து நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் துவைக்க வேண்டும்.

    தனியாக துவைக்கவும்

    எப்போதும் ஜீன்ஸை தனியாக துவைத்து வந்தால், அதன் நிறம் தக்க வைக்கப்படும்.

    தேய்த்து துவைக்க வேண்டாம்

    நிறைய மக்கள் ஜீன்ஸை துவைக்கும் போது பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து துவைப்பார்கள். ஆனால் அப்படி நன்கு தேய்த்து துவைத்தால், ஜீன்ஸின் தரம் குறைய ஆரம்பித்துவிடும். எனவே அளவுக்கு அதிகமாக தேய்த்து துவைக்க வேண்டாம்.

    0 comments:

    Post a Comment