ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீரின் ஆதிபகவன் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சமுத்திரகனி இயக்கத்தில் நடித்த நிமிர்ந்து நில் படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் ஜெயம் ரவியின் மார்க்கெட்டில் பெரிய பாதிப்பில்லை. லட்சுமணன் இயக்கும் ரோமியோ ஜூலியட், ஜெயம்ராஜா இயக்கும் தனி ஒருவன், மற்றும் சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருமளவுக்கு பிஸியாகவே இருக்கிறார் ஜெயம் ரவி. இதில் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.
இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்! அரவிந்த்சாமி கூறியதை ஆமோதிக்கும் வகையில், தனி ஒருவன் படக்குழுவைச் சேர்ந்தவர்களும், அப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை, வேறொரு முக்கியமான கேரக்டரில் தான் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.
வில்லனாக நடிக்க வில்லை என்றால் வேறு என்ன வேடத்தில் நடிக்கிறராம் அரவிந்த்சாமி! ஜெயம்ரவியின் அப்பா வேடத்தில் நடிப்பதாக சிலர் காதைக்கடிக்கிறார்கள். அப்படியென்றால் வில்லனாக நடிப்பது யார்? இவன் வேற மாதிரி, மான் கராத்தே படங்களில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணாதான் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்கிறார்!
0 comments:
Post a Comment