Monday, 30 December 2013

Tagged Under: , ,

பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில்!

By: ram On: 12:13
  • Share The Gag



  • ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி டைரக்ட் செய்துள்ள படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அமலாபால் ஹீரோயின். நீ திருந்து உலகம் தானாக தன்னை திருத்திக் கொள்ளும் என்ற மெசேஜை கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.


     2013ல் ஆதிபகவன் கொடுத்த அடியில் துவண்டு போயிருக்கும் ஜெயம் ரவி இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிமிர்ந்துநில் படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. வருகிற 14ந் தேதி திரையிடப்படுகிறது.



    இதுகுறித்து ஜெயம்ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரசிகர்களுக்கும், சக நடிகர் நடிகையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிமிர்ந்து நில் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.


    அது பெர்லின் திரைப்பட விழாவுக்கு தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் தரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது. மேலும் நல்ல செய்திகள் இந்த ஆண்டு வரும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

    0 comments:

    Post a Comment