Monday, 30 December 2013

Tagged Under: ,

வடிவேலுவின் இடைத்தைப் பிடிப்பாரா சூரி ?

By: ram On: 19:19
  • Share The Gag



  • வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் பட்டியில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்சமயம் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார்.


    நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்த காலத்திலிருந்தே நகைச்சுவை நடிகர்களுக்கென்று சில காலகட்டங்கள் பொற்காலமாக அமைந்திருந்தது.



    குறிப்பிடத்தக்கது.கடந்த தொண்ணூறுகளில் தொடங்கி பல ஆண்டுகள் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமாக இருந்துவந்தன. கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் குறைந்து வந்த காலங்களில் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் கொடிகட்டிப் பறந்தனர். குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைகள் தமிழர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.


    வடிவேலு நடிக்கும் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக அதிகமாக இல்லாததாலும், சந்தானத்தின் புதிய முறை நகைச்சுவைகளாலும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சந்தானம் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார்.


    அந்த வகையில் தற்பொழுது அதிகப் படங்கள் நடிக்கும் நகைச்சுவை நடிகருக்கான பட்டியலில் “பரோட்டா” சூரியும் இடம்பெற்றுள்ளார். இவரது நடிப்பில் இவ்வாண்டில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” முதலான படங்கள் பெரும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன.


    இவர் நடிப்பில் வருகிற 2014ல் இளைய தளபதி விஜயின் “ஜில்லா”, சிவகார்த்திகேயனின்” மான் கராத்தே”, ஜெயம் ரவியின்  “ நிமிர்ந்து நில்” மற்றும் விஜய் சேதிபதியின் “ ரம்மி” மற்றும் அனேக திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

    0 comments:

    Post a Comment