Monday, 30 December 2013

Tagged Under: , ,

தனுஷ்,சிம்பு,அனிருத் - கலக்கவிருக்கும் மூவர் கூட்டணி

By: ram On: 20:34
  • Share The Gag


  •    

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய இளைய தலைமுறைக் கலைஞர்களான தனுஷ், சிம்பு மற்றும் அனிருத் ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.


    சமீபமாக இம்மூவரும் தங்களது விடுமுறையைக் கொண்டாடுவதற்காக லண்டன் சென்றிருந்தனர். ஆனால் இவர்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்குப் போகவில்லை என்றும், தங்களது புதிய படத்தினைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவே சென்றார்கள் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.


    தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடித்தால் அது மிகப்பெரும் வெற்றிக்கு வித்தாகும் என்பது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


    ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிப்பார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவி வரும் நேரத்தில் இந்த வதந்தியும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் அனிருத்தும் இவர்களின் படத்தில் இணைந்தால் அது இளைஞர்களுக்கு மாபெரும் விருந்து அளிப்பதாகவும் இருக்கும் என்றும்
    எதிர்பார்க்கப்படுகிறது.


    சிம்பு தற்பொழுது பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் நடித்துவருகிறார். தனுஷ் தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் வேலையில்லாப் பட்டதாரி என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

    0 comments:

    Post a Comment