Monday, 9 December 2013

Tagged Under: ,

அஜித்துடன் இணையும் சிம்பு!

By: ram On: 18:43
  • Share The Gag


  • கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.


    இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.


    இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.


    இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.


    'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.


    சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.


    சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.

    0 comments:

    Post a Comment