Monday, 9 December 2013

Tagged Under: , , , , ,

மனைவிக்கு முக்கியமாக தெரிய வேண்டியது!

By: ram On: 21:56
  • Share The Gag

  • கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


    கணவன் தவறு செய்தால்...


    சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.


    குற்றங்குறைகள் இருந்தால்...


    உண்மையாக இருந்தாலும், பிறர் உள்ளம் வருந்துமாறு எதையும் சொல்லாதீர்கள். ஒரு முடவனைப் பார்த்து நீ ஏன் முடவன் ஆனாய் என்று கேட்காதீர்கள். எவரும் தம் குற்றங்குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது இதயம் நிதானமாய் துடிக்கிறது. இதனால் உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அதிக இரத்தம் கிடைக்கிறது. அதிக அளவு பிராணவாயு கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு ஏற்படும். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சியை தினசரி செய்ய பழக்குங்கள். சிறுமிகள் கீழ்கண்டவற்றை செய்யலாம்.


    தசைகள் இயக்கும் பயிற்சி...


    சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்பு தலையையும், கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கை விரல்களால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.


    தோள் பயிற்சி...


    கால்களை அகல வைத்தபடி கைகளால் கால்களுக்கு இடையில் தரையைத் தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சியை செய்ய வேண்டும்.


    மார்பகப் பயிற்சி...


    மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டுவர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும்போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சிவிடக் கூடாது. நான்கு தடவைகள் செய்யவும் மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.


    கால்கள் மெல்லியதாக இருக்க பயிற்சி...


    ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் கூட விடலாம்.


    இருதயநோய் ஆபத்தை தடுக்க...


    ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை சாதாரணமாக நடந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய், மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் கண்டு பிடித்துள்ளார்கள். நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் படுகிறது.


    உடலழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க...


    உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிக எளிது. இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். அன்றாட வேலைகளில் ஒன்றாக உடற் பயிற்சியை கருதினால் நாம் வாழ்வில் வளமாக வாழலாம். நோய்கள் நிச்சயம் நம்மை நெருங்காது.


    தோள்கள் வலிமை பெற...


    கைகளை மாற்றி, மாற்றி மேலே உயரத் தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சி செய்தாள் தோள்கள் வலிமை பெறும்.


    வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் மறைய...


    மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி மேலே உயர்த்தி இறக்கி பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போலவும் கால்களை இயக்கலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து அழகிய தோற்றம் ஏற்படும்.


    கழுத்து வலிமை பெற...


    தலைப்பகுதியை மட்டும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துப்புறம் வலிமை பெறும்.

    0 comments:

    Post a Comment