Monday, 9 December 2013

Tagged Under: , , ,

இதுக்கு கொடுக்கலாம் மானியம்!

By: ram On: 21:41
  • Share The Gag


  • நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.


    மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது. ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு அரசு செய்தால், மக்கள் குண்டு பல்பை விட்டு, சி.எப்.எல்., பல்புக்கு மாறுவர்.


    ஆந்திராவில், அரசே வீட்டுக்கு வீடு குண்டு பல்பை கழட்டி விட்டு, சி.எப்.எல்., பல்பை, இலவசமாக போட்டுச் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், எது எதற்கோ மானியம் வழங்கும் அரசு, மின்சார சிக்கனத்திற்காக சி.எப்.எல்., பல்புக்கு, மானி யம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.

    0 comments:

    Post a Comment