Wednesday, 22 October 2014

Tagged Under: , , , ,

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

By: ram On: 20:06
  • Share The Gag
  • செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

    ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

    இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

     

    மூங்கில்

    மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

    துளசி

    துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

    ஹனிசக்கிள் (Honeysuckle)

    இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


    மல்லிகை

    மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

    லாவெண்டர்

    லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

    ரோஜா

    அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


    மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

    வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

    ரோஸ்மேரி

    ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

    சேஜ்

    சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

    0 comments:

    Post a Comment