Sunday, 21 September 2014

Tagged Under:

வேப்பம் பட்டை மருத்துவ பயன்கள் - நீரிழிவு, சர்க்கரை குஷ்டம் குணமாகும்.

By: ram On: 21:18
  • Share The Gag
  • • முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி சம அளவில் கலந்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என 48 சாப்பிட்டு வரத் அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

    • வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

    உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

    • நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்தி காயவைத்து பொடித்து அதனைக 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும், வனப்பும் பெறும்.  உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்க்கரை குஷ்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும்.

    • வேப்பம் பட்டையுடன் நீர், எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி,​​ சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு வருகிறது.

    0 comments:

    Post a Comment